குருவிரொட்டி இணைய இதழ்

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் – குறள்: 955

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று.
குறள்: 955

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால்
தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தொன்று தொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார்; தாம் கொடுக்கும் பொருள் சுருங்கிப்போன விடத்தும்; தம் கொடுக்குந் தன்மையினின்று நீங்குதல் இல்லை.



மு. வரதராசனார் உரை

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.



G.U. Pope’s Translation

Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.

Thirukkural: 955, Nobility, Wealth.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link