குருவிரொட்டி இணைய இதழ்

வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் – குறள்: 721


வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
– குறள்: 721

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சொல்லின் தொகுதியை யறிந்த தூய மொழிநடையார்;கற்றோர் கூடிய வல்லவை, அல்லவை என்னும் இருவகை அவைகளை அறிந்து, வல்லவைக்கண் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தினால் மனந்தடுமாறியும் வாய் தவறியும் வழுப்படச் சொல்லார்.



மு. வரதராசனார் உரை

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.



G.U. Pope’s Translation

Men, pure in heart, who know of words the varied force,
The mighty council’s moods discern, nor fail in their discourse.

 – Thirukkural: 721, Not to dread the Council, Wealth