குருவிரொட்டி இணைய இதழ்

உடுப்பதூஉம் உண்பதூஉம் – குறள்: 1079


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றுஆகும் கீழ். – குறள்: 1079

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப் படுகிற கயவன், அவர்மீது வேண்டு மென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர்தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும் கீழ்மகன் காணுமாயின்; அவற்றைப் பொறாது அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறவல்லவனாம்.



மு. வரதராசனார் உரை

கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல் பொறாமைகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.



G.U. Pope’s Translation

If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?

 – Thirukkural: 1079, Baseness, Wealth