குருவிரொட்டி இணைய இதழ்

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று – குறள்: 939

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
குறள்: 939

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

சூதாட்டத்திற்கு அடிமையாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும்,
கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின்; அவனைப் பெயர் விளங்கலும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம்.



மு. வரதராசனார் உரை

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.



G.U. Pope’s Translation

Clothes, wealth, food, praise and learning, all depart
From him on gambler’s gain who sets his heart.

Thirukkural: 939, Gambling, Wealth.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link