குருவிரொட்டி இணைய இதழ்

சுழலும் இசைவேண்டி வேண்டா – குறள்: 777

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
– குறள்: 777

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக்
கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம்.



மு. வரதராசனார் உரை

பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.



G.U. Pope’s Translation

Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife.

 – Thirukkural: 777, Military Spirit, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link