குருவிரொட்டி இணைய இதழ்

சிறுமையும் செல்லாத் துனியும் – குறள்: 769


சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
– குறள்: 769

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத லெறுப்பும் ஏழைமையும் தனக்கில்லாவிடின்; படை பகைவரை வெல்லும்.



மு. வரதராசனார் உரை

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.



G.U. Pope’s Translation

Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.

 – Thirukkural: 769, The Excellence of an Army, Wealth