குருவிரொட்டி இணைய இதழ்

செயற்பால செய்யாது இவறியான் – குறள்: 437


செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.
– குறள்: 437

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் பாதுகாப்பும் பற்றிச் செய்யவேண்டியவற்றைச் செய்துகொள்ளாது, அதனிடத்துப் பற்றுள்ளம் வைத்த அரசனின் செல்வம்; அழிவிற்குத்தப்பி எஞ்சியிருக்குந் தன்மையின்றி வீணே கெடும்.



மு. வரதராசனார் உரை

செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.



G.U. Pope’s Translation

Who leaves undone what should be done, with niggard mind. His wealth shall perish, leaving not a wrack behind.

 – Thirukkural: 437, The Correction of Faults , Wealth