குருவிரொட்டி இணைய இதழ்

சான்றவர் சான்றாண்மை குன்றின் – குறள்: 990


சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.
– குறள்: 990

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த
உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; ஞாலமும் (பூமியும்) தன் பொறையைத் தாங்காததாய் முடியும்.



மு. வரதராசனார் உரை

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.



G.U. Pope’s Translation

The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.

 – Thirukkural: 990, Perfectness, Wealth