குருவிரொட்டி இணைய இதழ்

சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் – குறள்: 986


சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி
துலைஅல்லார் கண்ணும் கொளல்.
– குறள்: 986

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சான்றாண்மை யென்னும் பொன்னின் மாற்றை யறியதற்கு உரைகல்லாகிய செயல் எதுவெனின் ; தம்மினும் வலியாரிடத்துத் தாம் அடையுந் தோல்வியைத் தம்மினும் மெலியாரிடத்துமே விரும்பி ஏற்றுக் கொள்ளுதல்.



மு. வரதராசனார் உரை

சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.



G.U. Pope’s Translation

What is perfection’s test? the equal mind,
To bear repulse from ever meaner men resigned.

 – Thirukkural: 986, Perfectness, Wealth