குருவிரொட்டி இணைய இதழ்

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் – குறள்: 780


– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த அரசரின் கண்களில் நீர் பெருகுமாறு, போர்க்களத்திற் சாகப்பெறின்; அச்சாவு இரந்தாயினும் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையதாம்.



மு. வரதராசனார் உரை

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.



G.U. Pope’s Translation

If monarch’s eyes o’erflow with tears for hero slain,
Why would not beg such boon of glorious death to gain?

 – Thirukkural: 780, Military Spirit, Wealth