குருவிரொட்டி இணைய இதழ்

பெரியாரைப் பேணாது ஒழுகின் – குறள்: 892

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
குறள்: 892

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத
பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவராயின்; அது அப்பெரியாரால் அவர்க்கு எப்போரும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.



G.U. Pope’s Translation

If men will lead their lives reckless of great men’s will, Such life, through great men’s powers, will bring perpetual ill.

Thirukkural: 892, Not Offending the Great, Wealth.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link