குருவிரொட்டி இணைய இதழ்

பெரிதுஇனிது பேதையார் கேண்மை – குறள்: 839

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்.
– குறள்: 839

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;
ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்
ஏற்படுவதில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை.



மு. வரதராசனார் உரை

பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.



G.U. Pope’s Translation

Friendship of fools is very pleasant thing;
Parting with them will leave behind no sting.

Thirukkural: 839, Folly, Wealth

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link