குருவிரொட்டி இணைய இதழ்

பகல்கருதிப் பற்றா செயினும் – குறள்: 852


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னா செய்யாமை தலை.
– குறள்: 852

– அதிகாரம்: இகல், பால்: பொருள்



கலைஞர் உரை

வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்
என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன்னொடு கூடி வாழாமை கருதி வெறுப்பன செய்தானாயினும்; அவனொடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் தீயவற்றைச் செய்யாதிருத்தல் சிறந்ததாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.



G.U. Pope’s Translation

Though men disunion plan, any do thee much despite, ‘Tis best no enmity to plan, nor evil deeds requite.

Thirukkural: 852, Hostility, Wealth.