குருவிரொட்டி இணைய இதழ்

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் – குறள்: 952


ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
குறள்: 952

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி
நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.



மு. வரதராசனார் உரை

உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.



G.U. Pope’s Translation

In these three things the men of noble birth fail not;
In virtuous deed and truthful word, and chastened thought.

Thirukkural: 951, Nobility, Wealth.