குருவிரொட்டி இணைய இதழ்

நத்தம்போல் கேடும் உளதாகும் – குறள்: 235


நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.
– குறள்: 235

– அதிகாரம்: புகழ், பால்: அறம்



கலைஞர் உரை

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது
புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை
நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நத்தம் போல் கேடும் – புகழுடம்பின் கரு வளரச்சியடைவது போல் (முழு வளரச்சிபுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும்; உளது ஆகும் சாக்காடும் – அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும்; வித்தகர்க்கு அல்லால் அரிது – திறப்பாடுடையவர்க்கன்றி ஆகாவாம்.



மு. வரதராசனார் உரை

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.



G.U. Pope’s Translation

Loss that is gain, and death of life’s true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yeild.

 – Thirukkural: 235, Renown, Virtues