குருவிரொட்டி இணைய இதழ்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ – குறள்: 707


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்.
– குறள்: 707

– அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு
வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், வெறுத்துச் சினந்தாலும், தான் அவற்றை முன்னறிந்து அவற்றைப் பிறர்க்கு அறிவிப்பதில் வாயினும் முற்பட்டு நிற்றலால்; முகத்தைப்போல் அறிவுமிக்க வேறு வுறுப்பு ஏதேனும் உண்டோ? இல்லை.



மு. வரதராசனார் உரை

ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?



G.U. Pope’s Translation

Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, ’tis the first herald still!

 – Thirukkural: 707, The Knowledge of Indications, Wealth