குருவிரொட்டி இணைய இதழ்

மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் – குறள்: 576


மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடு
இயைந்துகண் ணோடா தவர்.
– குறள்: 576

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்
இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; இயங்குதிணையராயினும் நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர்.



மு. வரதராசனார் உரை

கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.



G.U. Pope’s Translation

Whose eyes’neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they.

 – Thirukkural: 576, Benignity, Wealth