குருவிரொட்டி இணைய இதழ்

கொல்லா நலத்தது நோன்மை – குறள்: 984


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
– குறள்: 984

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நோன்மை கொல்லாமையைத் தனக்குரிய அறங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது; அதுபோலச் சான்றாண்மை பிறர் குற்றத்தைச் சொல்லாமையைத் தனக்குரிய குணங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது.



மு. வரதராசனார் உரை

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.



G.U. Pope’s Translation

The type of ‘penitence’ is virtuous good that nothing slays.
To speak no ill of other men is perfect virtue’s praise.

 – Thirukkural: 984, Perfectness, Wealth