குருவிரொட்டி இணைய இதழ்

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற – குறள்: 867


கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை
. குறள்: 867

– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.



கலைஞர் உரை

தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போரைத் தொடங்கி அண்மையிலிருந்து கொண்டு தனக்குத்தானே மாறானவற்றைச் செய்வான் பகையை; அவன் விரும்பிய பொருளை விலையாகக்கொடுத்தாயினும் உறுதியாகப் பெறல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

Unseemly are his deeds, yet, proffering aid, the man draws nigh; His hate-’tis cheap at any price-be sure to buy!

Thirukkural: 867, The might of Hatred, Wealth.