குருவிரொட்டி இணைய இதழ்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லி – குறள்: 724


கற்றார்முன் கற்ற செலச்சொல்லி தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
– குறள்: 724

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக்
கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்
கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் கற்றவற்றை அவையல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி; தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க.



மு. வரதராசனார் உரை

கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

What you have learned, in penetrating words speak out before
The learn’d; but learn what men more learn’d can teach you more.

 – Thirukkural: 724, Not to dread the Council, Wealth