குருவிரொட்டி இணைய இதழ்

காதல காதல் அறியாமை – குறள்: 440


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
– குறள்: 440

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தான் பித்துக் கொள்வது போலும் பெருவிருப்புக்கொண்ட பொருள்களையும் துறைகளையும் தன் பகைவர்க்குத் தெரியாவாறு நுகரவும் கையாண் டின்புறவும் வல்லனாயின்; அப்பகைவர் தன்னை வஞ்சித்தற்குச் செய்யுஞ் சூழ்ச்சி ஏதும் பயனற்ற தாய்ப்போம்.



மு. வரதராசனார் உரை

தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.



G.U. Pope’s Translation

If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove.

 – Thirukkural: 440, The Correction of Faults , Wealth