குருவிரொட்டி இணைய இதழ்

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் – குறள்: 577


கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
– குறள்: 577

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;
கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்;கண்ணுடையவர் எப்போதேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார்.



மு. வரதராசனார் உரை

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.



G.U. Pope’s Translation

Eyeless are they whose eyes with no benignant lustre, shine; Who’ve eyes can never lack the light of grace benign.

 – Thirukkural: 577, Benignity, Wealth