குருவிரொட்டி இணைய இதழ்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் – குறள்: 643


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
– குறள்: 643

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால்



கலைஞர் உரை

கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் பின்பு தம்மைவிட்டுப் பிரியாவாறு வயப்படுத்தும் தன்மைகளை விரும்பித்தழுவி; பகைவராயிருந்து தம் சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரும் பின்பு அப்பகைமை நீங்கி நட்பை விரும்பும் வண்ணம் சொல்வதே, அமைச்சர்க்குரிய சொன்முறையாம்.



மு. வரதராசனார் உரை

சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்,



G.U. Pope’s Translation

‘Tis speech that spell-bound holds the listening ear,
While those who have hot heard desire to hear.

 – Thirukkural: 643, Power of Speech, Wealth