குருவிரொட்டி இணைய இதழ்

இலர்பலர் ஆகிய காரணம் – குறள்: 270


இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி
கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.



மு. வரதராசனார் உரை

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.



G.U. Pope’s Translation

The many all things lack! The cause is plain,
The ‘penitents’ are few. The many shun such pain.

 – Thirukkural: 270,Penance, Virtues