குருவிரொட்டி இணைய இதழ்

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் – குறள்: 853


இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாஇல் விளக்கம் தரும்.
– குறள்: 853

– அதிகாரம்: இகல், பால்: பொருள்



கலைஞர் உரை

மனமாறுபாடு என்னும் நோயை யார் தாங்கள் மனத்தை விட்டு
அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பந்தரு நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குவானாயின்;அது அவனுக்கு அழியாத குற்றமற்ற புகழைத் தரும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால். அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.

Thirukkural: 853, Hostility, Wealth.