குருவிரொட்டி இணைய இதழ்

இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக – குறள்: 712


இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
– குறள்: 712

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின்
நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சொற்களின் வழக்காற்றை யறிந்த நல்லறிஞர் ; அவையிற் பேசுஞ் சமையத்தை நோக்கி; அவையினரின் மனநிலையைத் தெளிவாக அறிந்து அதற்கேற்ப ஒரு பொருளைப் பற்றிச் சொல்க.



மு. வரதராசனார் உரை

சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.



G.U. Pope’s Translation

Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they’ve made their own.

 – Thirukkural: 712, The Knowledge of the Council Chamber, Wealth