குருவிரொட்டி இணைய இதழ்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் – குறள்: 659


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. – குறள்: 659

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில்
வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வ மெல்லாம் இம்மையிலேயே தான் அங்ஙனம் வருந்து மாறு தன்னை விட்டு நீங்கிப்போம்; தூய வினைகளால் வந்த பொருள்களோ முன்பு இழக்கப்படினும் பின்பு வந்து பயன் தரும்.



மு. வரதராசனார் உரை

பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.



G.U. Pope’s Translation

What’s gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow.

 – Thirukkural: 659, Purity in Action, Wealth