குருவிரொட்டி இணைய இதழ்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – குறள்: 428


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428

– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவில்லாதவர்கள்தான்  அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.
அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயலாம்.



மு. வரதராசனார் உரை

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.



G.U. Pope’s Translation

Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom’s part.

– Thirukkural: 428, The Possession of Knowledge, Wealth



உதாரணப்பட விளக்கம்

உதாரணப் படத்தில் உள்ள எலி, எளிதில் வெடிக்கும் தன்மையுடைய பட்டாசுகளின் மேல் சாய்ந்து கொண்டு புகைப்பிடிப்பது, அதன் மடமையைக் காட்டுகிறது. அஞ்சவேண்டிய இதுபோன்ற செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது, அறிவில்லாதவர்களுடைய செயலாம். ஆனால், அறிவுடையோர் இத்தகைய செயல்களுக்கு அஞ்சுவர்.