குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் – குறள்: 985


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
– குறள்: 985

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்
என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது. அக்கருமத்திற்குத் துணையாவாரைத் தாழ்ந்து வேண்டித் தம்மொடு சேர்த்துக்கொள்ளுதல்; இனி, சால்புடையார் தம் பகைவரைத் தம் துணைவராக மாற்றுதற்குக் கையாளுங் கருவியும் அதுவேயாம்.



மு. வரதராசனார் உரை

ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.



G.U. Pope’s Translation

Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman’s rage.

 – Thirukkural: 985, Perfectness, Wealth