குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – குறள்: 891


ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
குறள்: 891

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது
இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம்.



மு. வரதராசனார் உரை

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.



G.U. Pope’s Translation

The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will.

Thirukkural: 891, Not Offending the Great, Wealth.