குருவிரொட்டி இணைய இதழ்

ஆரா இயற்கை அவாநீப்பின் – குறள்: 370


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
– குறள்: 370

– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,
நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை ஒருவன் விடுவானாயின் , அவ்விடுகை அப்பொழுதே அவனுக்கு ஒருகாலும் மாறாத இயல்பையுடைய பேரின்பத்தைத்தரும்.



மு. வரதராசனார் உரை

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.



G.U. Pope’s Translation

Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow’s tide.

Thirukkural: 370 , The Extirpation of Desire, Virtues