குருவிரொட்டி இணைய இதழ்

தமிழ் அறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் முத்திரைப்பதிப்புகள் – நூல்கள் அறிவோம்!

தமிழ் அறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் முத்திரைப்பதிப்புகள்

தமிழ்ச் சான்றோர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களின் அரும்பெரும் படைப்புகளுக்கு, தமிழ் இலக்கியக்களஞ்சியத்தில் தனிப்பெரும் இடம் உண்டு. திருக்குறளில் வரையறுக்கப்பட்டுள்ள “சான்றாண்மை”, “சான்றோர்” எனும் சொற்களுக்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் தமிழ் அறிஞர் இரா. இளங்குமரனார். அவர் இரண்டாயிரத்து இருப்பத்தியோராம் (2021) ஆண்டு, தனது தொண்ணூற்று நான்காவது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்தார். ஆனாலும், அவருடைய நூல்கள் மூலம் அவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்; தமிழ் போல் என்றும் அவர் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்! அவர் ஐந்நூறு நூல்களுக்கும் மேற்பட்ட அரும்பெரும் தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். அவருடைய நூல்களை மட்டும் கொண்டே ஒரு நூலகத்தை நாம் உருவாக்கிட முடியும்!

நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவருடைய படைப்புகளில் ஒரு சிறிய துளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய மற்ற படைப்புகளும் இனி வரும் நாட்களில் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. பாவேந்தர் பதிப்பகம் – திருமழபாடி

2. தமிழ்மண் பதிப்பகம் / வளவன் பதிப்பகம், சென்னை-17

  1. இனிக்கும் இலக்கணம்
  2. திருக்குறள் ஆராய்ச்சி – 1
  3. திருக்குறள் ஆராய்ச்சி – 2
  4. திருக்குறள் கதைகள்
  5. திருக்குறள் கட்டுரைகள்
  6. வள்ளுவமும் வாழ்வியலும்
  7. திருக்குறள் நோக்கு
  8. திருக்குறளில் ஒப்புரிமை
  9. தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்
  10. வாழ்வியல் வழிநடை, வையகம் தழுவிய வாழ்வியல், வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்
  11. வழக்குச்சொல் அகராதி
  12. வட்டார வழக்குச் சொல் அகராதி
  13. இணைச்சொல் அகராதி
  14. உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகரவரிசை)
  15. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) –
    • எழுத்து
    • சொல்
    • பொருள்
    • யாப்பு
    • அணி
  16. இலக்கண மேற்கோள் விளக்கம்
  17. இலக்கண வரலாறு
  18. தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியம்
  19. இலக்கிய வகை அகராதி
  20. செந்தமிழ் – ஓர் அறிமுகம்
  21. புறநானூற்றுக் கதைகள்
    • அந்த உணர்வு எங்கே?
    • பெரும் புலவர் மூவர்
    • பண்டைத் தமிழ் மன்றங்கள்
  22. காக்கைபாடினியம்
  23. பாவாணர் வரலாறு
  24. பாவாணர் – பொன்மொழிகள் – உவமைகள்
  25. சுவடிக்கலை
  26. களவியற் காரிகை
  27. தகடூர் யாத்திரை – மூலமும் உரையும்
  28. யாப்பருங்கல விருத்தி – (பழைய விருத்தியுரையுடன்)
  29. தமிழ்க் “கா.சு” கலைக் களஞ்சியம்
  30. தமிழ் வளம் – சொல்
  31. தமிழ் வளம் – பொருள்
  32. புறத்திரட்டு
  33. வாழ்வியல் வளம்
  34. தமிழர் வாழ்வியல் இலக்கணம்
  35. முதுமொழிக் களஞ்சியம் (ஐந்து நூல்கள்)
  36. தகடூர் யாத்திரை
  37. கல்விச் செல்வம்
    • இருசொல் அழகு
    • தனிப்பாடல் கனிச்சுவை
    • பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி
  38. திரு. வி. க. தமிழ்க்கொடை – அறிமுகம்
  39. சான்றோர் வரலாறு: அரசஞ்சண்முகனார், வேதநாயகம் பிள்ளை, தாமோதரனார்
  40. தமிழ்மலை, மறைமலையடிகள் ஆராய்ச்சித்திறன்
  41. பாண்டி நாட்டுப் புலவர்கள் 1, 2
  42. தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு, திரு.வி.க. தமிழ்த் தொண்டு
  43. திருவரங்கர் வரலாறு
  44. வ.சு. வரலாறு
  45. ஈரோடு வேலா (வரலாறு), குணநலத் தோன்றல் குப்புமுத்து ஐயா
  46. கவிஞர் தாகூர் – பிணி தீர்க்கும் பெருமான், அறப்போர், இரு கடற்கால்கள்
  47. அண்ணல் ஆபிரகாம், அறவோர் அமைதிப் பணிகள், உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
  48. மதுரைக் கோயில் வரலாறு, மதுரைத் திருக்கோயில், திருவிளையாடற் கதைகள் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
  49. அன்பும் அறிவும், பழனி பாலநீதி, நீதிபோத வெண்பா , நீதி சாரம்
  50. சிற்றருவி (குழந்தையர் பாடல்), வானவில், முல்லாவின் கதைகள் முப்பது
  51. வள்ளுவர் வழியில் வள்ளலார், வள்ளலார் கண்ட சாகாக்கலை
  52. பரிபாடலில் திருமுருகன், பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)
  53. சொல்லியன் நெறிமுறை – அகல், செந்தமிழ்ச் சொல்வளம், வேர்ச்சொல் விரிவு, பேரகத்தியமும் புதிய ஐந்திறமும், தொல்காப்பியர் காலம்
  54. சிவ வாக்கியர், குதம்பைச் சித்தர், சிவஞானபோதம்
  55. திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, திருவருணைக் கலம்பகம், மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை, மீனாட்சியம்மை குறம் – இரட்டை மணிமாலை