குருவிரொட்டி இணைய இதழ்

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)


பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits)


நிலா

  • நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை.
  • ஆனால், பூமியில் வளிமண்டலம் இருப்பதால், நம் கண்களுக்கு வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

தவளை

தவளை நிலத்தில் இருக்கும் போது நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. ஆனால் நீரில் இருக்கும்போது அதன் ஈரமான தோலின் மூலம் ஆக்சிஜனை உள்வாங்குகிறது.

ஆப்பிள்

  • உலகில் மொத்தம் 7500 ஆப்பிள் வகைகள் காணப்படுகின்றன.
  • ஆப்பிளில் 25% காற்று நிரம்பி உள்ளது. அதனால் அது நீரில் மிதக்கிறது.
  • ஒரு ஆப்பிள் மரத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

மனிதனின் பற்கள்

மனிதனின் பற்கள், சுறா மீனின் பற்களுக்கு நிகரான வலிமை கொண்டவை.

மனிதனின் உமிழ்நீர்

ஒரு நாளுக்கு நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவு ஒரு லிட்டர்.

மனிதனின் எலும்புகள்

பிறந்த குழந்தையின் உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை முதிர்ச்சியடைந்த மனிதனின் உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும். அதாவது, குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒருங்கிணைகின்றன. பிறகு, முதிர்ச்சி அடைந்த மனிதனாகும் போது, மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 ஆக குறைகிறது.

மனிதனின் இரத்தம்

  • மனித இரத்தத்தை எட்டு வகையான குழுக்களாகப் பிரிக்கலாம். அவை A+, A-, B+, B-, O+, O-, AB+, AB-
  • ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் உடலின் எலும்பு மஜ்ஜையில் இருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 500 கோடி ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகின்றன.

மனிதனின் மூளை

  • முதிர்ச்சியடைந்த மனிதனின் எடை சராசரியாக 1.3 கிலோகிராம் முதல் 1.4 கிலோகிராம் வரை இருக்கும்.
  • மூளையின் எடை உடலின் எடையில் 2% எடையைக் கொண்டது. ஆனால், அது செயல்பட நமது உடலின் ஆற்றலில் 20% ஆற்றலை எடுத்துக்கொள்கிறது.
  • மனிதனின் மூளைக்கும் உடலுக்கும் உள்ள விகிதம், பூமியிலுள்ள மற்ற பாலூட்டிகளின் மூளைக்கும் அவற்றின் உடலுக்கும் உள்ள விகிதத்தைவிட அதிகமாகும்.

மனிதனின் வயிறு

நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவைச் செரிமானம் செய்ய உதவுவதுடன் வயிற்றிலுளள பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.


புரோட்டீன்கள்

நமது உடலில் 20 சதவீதம் பகுதி புரோட்டீன்களால் ஆனது. புரோட்டீன்கள் நம் உடலின் செல்கள் / திசுக்கள் / உடல் வளர்ச்சிக்கும், உடல் கட்டமைப்பிற்கும் மிகவும் உதவுகின்றன.


விலங்குண்ணும் தாவரங்கள்

  • நெப்பந்திஸ் (Nepenthes), வீனஸ் பூச்சிப் பிடிப்பான் (Venus Fly Trap) போன்ற தாவரங்கள் பூச்சிகளை உண்ணக்கூடியவை.
  • இவற்றின் குடுவை (ஜாடி) போன்ற அமைப்புடைய பகுதியில், அமரும் பூச்சிகள் குடுவையிலுள்ள திரவத்தால் செரிமானம் அடைகின்றன.
  • நைட்ரேட் சத்து குறைவான நிலப்பகுதியில் வளரும் இவ்வகையான தாவரங்கள் அவற்றுக்கு தேவையான நைட்ரேட் சத்தை பூச்சிகளிடமிருந்து பெறுகின்றன.