குருவிரொட்டி இணைய இதழ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி


தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி

தேவை

செய்முறை

  1. முதலில் தேங்காயைத் துருவிப் பால் எடுக்கவும். துருவிய தேங்காய் மூன்று முறை பிழிந்து பால் எடுக்கவும்; முதலில் பிழிந்த பால் கெட்டியாக இருக்கும். அந்த பாலைத் தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அரிசியைக் கழுவி எடுக்கவும். பின் மூன்றாவது பிழிந்த பாலையும் இரண்டாவது பிழிந்த பாலையும் அரிசியில் ஊற்றவும். தண்ணீரின் அளவைக் குறைத்து அதில் ஊற்றி குக்கரில் போட்டு சமைத்து எடுக்கவும்.
  3. பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும். எண்ணெய்காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயைக் கிள்ளி அதில் போடவும். கடுகு போட்டு வெடித்தவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை போட்டு கிளறிவிடவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை அரிந்து போடவும். பின் கறிவேப்பிலையையும் அதில் போட்டு நன்றாக கிளறவும் . முதலில் எடுத்து வைத்த பாலை அதில் ஊற்றி உப்பையும் போடவும்.
  4. மிதமான சூடு வந்தவுடன் அதை இறக்கி வைத்து சமைத்த சோறை அதில் போட்டு நன்றாக கிளறவும்.

தேங்காய் பால் சோறு சாப்பிட சுவையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொள்ள, தக்காளித் துவையல் நன்றாக இருக்கும்.