குருவிரொட்டி இணைய இதழ்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
வெண்பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் முந்திரி நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 
  2. தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும்.
  3. சோறு வெந்து வரும்போது உப்பு போட்டு கிளறி விடவும். நன்றாக  குழைந்து வரும் போது அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
  4. வெண்பொங்கல் அடிபிடிக்காமல் கிளறி விட்டு தண்ணீர் வற்றிய பின் இறக்கி வைக்கவும்.

குறிப்பு

தேவைப்படின், வெண்பொங்கலை அடுப்பிலிருந்து இறக்கிவைத்த பின், ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி பருப்பு போட்டு கருகாமல் வறுத்து பொங்கலில் போட்டு கிளறி விடவும்.

இதற்கு பரங்கிக்காய் கூட்டு நன்றாக இருக்கும்.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link