குருவிரொட்டி இணைய இதழ்

வெண்டைக்காய் பச்சடி – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக


வெண்டைக்காய் பச்சடி – Okra Pachadi (Ladies Finger Pachadi) – சமையல் பகுதி

தேவையான பொருட்கள்





செய்முறை

  1. முதலில் வெண்டைக்காயை கழுவி மெலிதாக, வட்டமான சீவல் துண்டுகளாக (Slices) அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய்த்துண்டுகளையும், சீரகத்தையும் சேர்த்து மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு நன்றாக அரைத்து எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் தனியாக வைக்கவும்.
  3. அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை அதில் வைத்து எண்ணெயை ஊற்றி, அடுப்பை மெதுவாக எரியாக எரிய விடவும்.
  4. எண்ணெய் காய்ந்தவுடன், கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், வெண்டைக்காய்த் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும். குறிப்பு: வெண்டைக்காயை லேசாக கருகியது போன்ற பதத்தில் வதக்கிக் கொள்ளவும்.
  5. கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சீரக விழுதை, வதக்கிய வெண்டைக்காயுடன் சேர்த்து, நன்றாக கிளறிவிடவும். பின், சிறிதளவு நீரை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. கொதித்தபின், பாத்திரத்தை இறக்கி வைத்து, தயிரை அதில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

இப்போது சுவையான, வெண்டைக்காய் பச்சடி தயார்.