குருவிரொட்டி இணைய இதழ்

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி


இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் இஞ்சியை நன்றாக் கழுவிக் கொள்ளவும். பின் அவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
  3. அடுப்பை பற்றவைத்து, அகலமான பாத்திரத்தை அடுப்பில்வைத்து, அதில் எண்ணை ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரியவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன், அரிந்துவைத்துள்ள இஞ்சியை, நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வறுத்து வைத்துள்ள இஞ்சியை சிறிய மிக்சி ஜாரில் போட்டு  நன்றாகப் பொடி செய்து எடுத்துக்கொள்ளவும்.
  4. வாசனையுடன் கூடிய இஞ்சி வறுத்த மீதி எண்ணெயை அடுப்பில் வைத்து கடுகை போடவும். கடுகு வெடித்தவுடன் கரைத்த புளியை அதில் ஊற்றவும். அதனுடன் பொடித்த இஞ்சி,  தனியாத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் மற்றும்  பெருங்காயத்தூள் இவற்றை எல்லாம் அதில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து கிளறிவிட்டு பின் கொதித்தவுடன், இறக்கிவைக்கவும்.

வறுத்து பொடி செய்வதால், இது சுவையிலும் மணத்திலும் இஞ்சித்தொக்கிலிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் இருக்கும். மேலும், இது தொக்கு போல் கெட்டியாக இருக்காது.