குருவிரொட்டி இணைய இதழ்

அத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe


அத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe


தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் அத்திக்காயை சுத்தமாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் அத்திக்காயை சிறு கல்லினால் அல்லது பூண்டு நசுக்கும் சிறு உலக்கையால் உடைத்து, தண்ணீரில் போட்டு அதில் உள்ள விதையை நீக்கவும்.
  2. விதை நீக்கிய அத்திக்காயை மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) இலேசாக போட்டு  ஒன்று இரண்டாக அரைத்து எடுக்கவும்.
  3. பின் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேகவைக்கவும். மிளகாய், தேங்காய், சீரகம் இவற்றை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பு 1/2 பதமாக  வேகும்பொழுது பூண்டை உரித்து அதில் போடவும்.  அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் இவற்றையும் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்தவுடன் அவற்றை தனியாக இறக்கி வைக்கவும்.
  4. பின் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை  வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன் மிக்சியில் அரைத்த அத்திக்காயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.  பாத்திரத்தில் அடிபிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும். (குறிப்பு: கூட்டில் அதிக தண்ணீர்விடாமல் இருக்கவேண்டும்.)
  5. அத்திக்காய் நன்றாக வெந்தவுடன், முதலில் வேகவைத்த பருப்பையும் அத்திக்காயில் போட்டு கிளறவும்.  அரைத்த தேங்காய் விழுதையும், பெருங்காயத்தையும் போட்டு அதனுடன் கிளறிவிட்டு இறக்கவும். 

இப்போது சுவையான அத்திக்காய் கூட்டு தயார்.