கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் – குறள்: 166

Thiruvalluvar

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 166

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டு மன்றி அவன் உறவினரும்; உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளு மின்றிக் கெடுவர்.



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.



G.U. Pope’s Translation

Who scans good gifts to others given with envious eye, His kin, with none to clothe or feed them, surely die.

 – Thirukkural: 166, Not envying, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.